Enable Javscript for better performance
செய்யாறு பகுதியில் சுகாதார மையங்களில் நெகிழி பயன்படுத்தத் தடை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு பகுதியில் சுகாதார மையங்களில் நெகிழி பயன்படுத்தத் தடை

    By DIN  |   Published on : 20th July 2018 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்களில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து செய்யாறு சுகாதார மாவட்ட பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை துணை இயக்குநர் வி.கோவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சென்னை இயக்குநரின் கடிதத்தின்பேரில், செய்யாறு சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றில் ஜூலை 16-ஆம் தேதியிலிருந்து நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அதாவது, பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் வகையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத நெகிழித் தாள்கள், நெகிழி குவளைகள், நெகிழிப் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், மரங்களின் பாதுகாப்பு கருதி, காகித குவளைகள், தட்டுகள் போன்ற பொருள்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    எனவே, பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள், 
    கண்ணாடி, பீங்கான், உலோக தட்டுகள், குவளைகள் மற்றும் துணிப்பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என 
    தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai