Enable Javscript for better performance
தமிழகத்துக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்: மக்களவையில் ஆரணி எம்.பி. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்: மக்களவையில் ஆரணி எம்.பி. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 20th July 2018 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு ஒதுக்கப்படவேண்டிய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்களவையில்  ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை கூறினார்.
     ஆரணிக்கு தொகுதி மக்களவை உறுப்பினர் செஞ்சி சேவல் வே.ஏழுமலை வியாழக்கிழமை வந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் தான் மக்களவையில் பேசியது குறித்து செஞ்சி சேவல் வே.ஏழுமலை கூறியதாவது:
    தமிழகத்துக்கு மத்திய அரசு உதவியிலான திட்டங்களுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களின் கீழ், தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு 4 ஆயிரத்து 474 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இதனால் மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்பட பல திட்டங்களுக்கான மத்திய நிதியுதவி கிடைக்காத காரணத்தால் அந்தத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
    மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகையில் மத்திய அரசிடம் இருந்து எஸ்.சி மாணவர்களுக்கான தொகை 1,547 கோடி ரூபாயும், எஸ்.டி மாணவர்களுக்கான தொகை 27 கோடி ரூபாயும் கடந்த ஓராண்டு காலமாக விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. வருடாந்திர நிதி ஒதுக்கீடும் போதுமான அளவில் இல்லை. எனவே, இந்தத் தொகையை நிகழாண்டு இரட்டிப்பாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 1,312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.
    நாட்டின் நிர்மாணத்தில் கல்வி அடிப்படையாக இருப்பதால் கல்வித் திட்டங்களுக்காக மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன் என்றார்.
    எனவே, விரைவில் தமிழக கல்வித் திட்டங்களுக்கான நிதி உடனடியாக வர வாய்ப்புள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai