Enable Javscript for better performance
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

    By DIN  |   Published on : 20th July 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 11 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
    வருவாய்த் துறையில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்வது வழக்கம். 
    அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் துணை வட்டாட்சியர்கள் வெவ்வேறு வட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    காவல் பயிற்சி முடித்த 6 பேர்: காவல் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பியுள்ள 6 துணை வட்டாட்சியர்களுக்குப் புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. 
    அதன்படி, வி.முருகானந்தம் செய்யாறு வட்ட மண்டல துணை வட்டாட்சியராகவும், ஆர்.ஜெகதீசன் கீழ்பென்னாத்தூர் வட்ட துணை வட்டாட்சியராகவும், எம்.சத்தியன் வெம்பாக்கம் வட்ட துணை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    இதேபோல, வி.சசிகலா சேத்துப்பட்டு வட்டத்துக்கும், எஸ்.சம்பத்குமார் வெம்பாக்கம் வட்டத்துக்கும், கே.தட்சிணாமூர்த்தி ஆரணி வட்டத்துக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    இதுதவிர, போளூர் வட்ட துணை வட்டாட்சியர் ஆர்.மஞ்சுளா, இதே வட்டத்தின் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். போளூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எஸ்.முனிராஜன் போளூர் மண்டல துணை வட்டாட்சியராகவும், வெம்பாக்கம் வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.பொன்னுசாமி வந்தவாசி தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    மேலும், வந்தவாசி வட்ட வழங்கல் அலுவலர் எஸ்.முகமதுகனி செய்யாறு சிப்காட் விரிவாக்கம் அலகு 4-ன் துணை வட்டாட்சியராகவும், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் அலகு 4-ன் துணை வட்டாட்சியர் வே.சம்பத் வந்தவாசி வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    பணியிட மாறுதல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai