Enable Javscript for better performance
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி சார்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஜோஸ்பின் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வேளாங்கண்ணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேரணியை தொடக்கிவைத்தார்.
    இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த முழக்கங்களை எழுப்பிச் சென்றனர். மேலும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை கையில் ஏந்திச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai