Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாம்: 179 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 179 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு செங்கம் வட்டாட்சியர் ரேணுகா தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை  வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட தனித் துணை ஆட்சியர் (கலால்) தண்டாயுதபாணி கலந்து கொண்டு, 139 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளான முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினார். முகாமில் வருவாய் ஆய்வாளர் அழகுபாண்டியம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், அப்பர்சாமி, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ஜி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஏ.எஸ்.பார்த்தசாரதி, வட்ட வழங்கல் அலுவலர் ஏ.ஆர்.ஜான்பாஷா, தலைமை நில அளவர் எஸ்.சையத் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ஜி.வி.பரிமளா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 125 மனுக்களை பெற்றுக் கொண்டார். இவற்றில் 40 மனுக்கள் ஏற்கப்பட்டு, பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு, நத்தம் அடங்கல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமில், வருவாய் ஆய்வாளர் விமலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai