Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான பொன் விழா தடகளப் போட்டிகள்: 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான பொன் விழா தடகளப் போட்டிகள்: 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 20th July 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் தமிழ்நாடு 50-ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 60-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    தமிழகம் முழுவதும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட 
    50-ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி, மாவட்ட அளவிலான 21 வயதுக்கு உள்பட்டோருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
    அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரா.ஜெயக்குமாரி தலைமை வகித்தார். பயிற்சி ஆட்சியர் மு.பிரசாத் முன்னிலை வகித்தார்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் 21 வயதுக்கு உள்பட்ட 60-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.2,500, ரூ.1,500, ரூ.1,000 பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனைகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
    மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்படும். 2-ஆம் இடம் பிடிப்போருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கத்துடன் 4 கிராம் தங்கமும், 3-ஆம் இடம் பிடிப்போருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் 4 கிராம் தங்கமும் பரிசாக வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai