Enable Javscript for better performance
மாவட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    அதன்படி, ஜூலை மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, 
    வருவாய்த் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துப் பேசுகின்றனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும், நேரில் தெரிவித்தும் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai