அண்ணனை தாக்கிய 2 தம்பிகள் கைது
By DIN | Published on : 21st July 2018 10:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கீழ்பென்னாத்தூர் அருகே அண்ணனைத் தாக்கியதாக 2 தம்பிகளை போலீஸார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மானாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணு. இவரது மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (48), ராமன் (42), முருகன் (34). இவர்களில் ராமன், முருகன் ஆகியோர் சென்னையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அனைவருக்கும் பொதுவான காலி மனையில் வீடு கட்டுவதற்கான பணிகளில் கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டாராம்.
தகவலறிந்த ராமன், முருகன் ஆகியோர் வந்து பாகப் பிரிவினை செய்யாமல் வீடு கட்டக் கூடாது என்று கூறினராம். இதையடுத்து, மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ராமன், முருகன் இருவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியைத் தாக்கினராம்.
இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து ராமன், முருகன்
ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.