Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 
    இந்தப் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்களை தனித் தனிப் பிரிவாகப் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
    போட்டியை திருவண்ணாமலை மாவட்ட உடல் கல்வி அலுவலர் கந்தசாமி, ஆய்வாளர் முனியன் ஆகியோர் தொடக்கிவைத்து பார்வையிட்டனர். போட்டியின் நடுவராக உடல் கல்வி ஆசிரியர்கள் குணச்செல்வன், முருகன், இளையபெருமாள், பாரதி, பாலகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
    நிகழ்ச்சியில் உடல் கல்வி ஆசிரியர் சங்கர், பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் துரைசாமி, துணைத் தலைவர் ராஜவேல், பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai