Enable Javscript for better performance
காளை விடும் விழா தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த படவேடு வீரக்கோவில் அருகே தடையை மீறி நடத்தவிருந்த காளை விடும் விழாவை போலீஸார் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
    போளூரை அடுத்த படவேடு வீரக்கோவில் அருகே ராமர் கோயில் தெரு படவேடு பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காளை விடும் விழா நடைபெறும் என முகநூல், கட்செவி அஞ்சலில் செய்தி பரப்பி, அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி, தருமபுரி, குடியாத்தம், வேலூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காளை விடும் விழாவுக்கு லாரிகளில் காளைகளை ஏற்றி வந்திருந்தனர்.
    இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் வருவாய்த் துறையினருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய்த் துறையினரும், சந்தவாசல் போலீஸாரும் அந்த இடத்துக்கு வந்து, காளை விடும் விழாவைத் தடுத்தி நிறுத்தினர். 
    மேலும், காளை விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்த விழாக்குழுவினரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai