Enable Javscript for better performance
சேவூரில் அரசுப் பள்ளி வகுப்பறைக் கட்டடப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ரூ. 77.55 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மூன்று அடுக்கு மாடிகளைக் கொண்ட அரசுப் பள்ளி வகுப்பறைக் கட்டடப் பணியை வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு ரூ. 77.55 லட்சத்தில் கூடுதலாக மூன்று அடுக்கு மாடிகளைக் கொண்ட வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    இந்த ஆய்வுப் பணியின் போது, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், ஒன்றிய அதிமுக செயலர் பி.ஆர்.ஜி.சேகர், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் க.சங்கர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, கட்டட ஒப்பந்ததாரர் பழனி, பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிச் செயற்பொறியாளர் செல்வகுமார், ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், சேவூர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai