Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கலாதரன் தலைமையில், அதன் ஊழியர்கள் செங்கம் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை, பஜார் வீதி ஆகிய பகுதியில் 40 மைக்ரானுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர். 
    இந்த ஆய்வின் போது, பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர், அவற்றைப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு 
    எச்சரிக்கை விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai