Enable Javscript for better performance
தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் பட்டிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில், சிறப்புப் பட்டிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனர் தலைவர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கவிஞர் லதா பிரபுலிங்கம், எழுத்தாளர் ந.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கனரா வங்கி மேலாளர் கருணாநிதி, திருவண்ணாமலை கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் கிருஷ்ண கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.
    தொடர்ந்து, பேச்சாளர் கு.சபரி தலைமையில் திரையிசைப் பாடல்களிளல் விஞ்சியிருப்பது தெய்வீகப் பாடல்களா?, தேசபக்திப் பாடல்களா?, சமுதாயப் பாடல்களா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பேராசிரியர் சங்கர், சிவப்பிரகாசம், அஜ்மல் (எ) முத்தமிழன், அஞ்சலி ஆகியோர் வாதிட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai