Enable Javscript for better performance
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் சி.காதர் ஷெரீப் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.முஹம்மத் ரியாஸ் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் கே.மாலிக் பாஷா, துணைச் செயலர்கள் கே.அப்துல் ரஹ்மான், ஏ.கரீமுல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் ஏ.உபயத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
    கூட்டத்தில் சென்னையில் காது கேளாத 7-ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
    மேலும்,இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட 17 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட 
    தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai