Enable Javscript for better performance
பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் போது அடக்குமுறையைக் கையாளக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் போது அடக்குமுறையைக் கையாளக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 21st July 2018 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கி.ராசூசேகர் 
    வரவேற்றார்.
    இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்படப் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
    அப்போது பேசிய விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விவசாயிகளிடம் அடக்குமுறையைக் கையாளக் கூடாது. மாவட்டத்தில் பள்ளி 
    மாணவ - மாணவிகளை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 100 நாள்கள் வேலைத் திட்டத்தை அனைத்துப் பயனாளிகளுக்கும், அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும். 
    மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
    இதையடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனே பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai