Enable Javscript for better performance
படவேடு கிராமத்தில் 8 நாள்களுக்கு மதுக் கடை மூடல்- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த படவேடு கிராமத்தில் ஆடி வெள்ளி விழாவையொட்டி, 8 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட உத்தரவு: போளூரை அடுத்த படவேடு கிராமத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. தொடர்ந்து, ஆடி மாதம் முடியும் வரை திருவிழா நடைபெற உள்ளது.
    எனவே, பக்தர்கள் நலன் கருதி படவேடு அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடை ஆடி மாதம் வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் என மொத்தம் 8 நாள்களுக்கு மூடப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai