Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு

    By DIN  |   Published on : 21st July 2018 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் ஆகியவை சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சம்பத் வரவேற்றார். கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் சிராஜ் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
    பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திமதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சிறப்பாசிரியர்கள், மாற்றுத் திறன் மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai