Enable Javscript for better performance
வேளாண் இணை இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி வட்டாரத்தில் உள்ள வயல்களில் தமிழக வேளாண் இணை இயக்குநர் செல்வசேகர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
    வந்தவாசி வட்டாரத்துக்கு உள்பட்ட பிருதூர், மருதாடு ஆகிய கிராமங்களில் வேளாண் விரிவாக்க மையம் மூலம் சொட்டுநீர் பாசனத்தைப் பயன்படுத்தி கரும்பு பயிரிடப்பட்டிருந்த வயல்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த நீரைக் கொண்டு கரும்பு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வந்தவாசி வேளாண் அலுவலர் தே.குமரன், உதவி வேளாண் அலுவலர்கள் 
    எம்.எஸ்.ராஜன், த.பெருமாள், சி.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai