Enable Javscript for better performance
அரசுப் பேருந்து கவிழ்ந்து 6 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தானிபாடி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
    தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று அருவங்காடு கிராமம் நோக்கிச் சென்றது. அருவங்காடு கிராம எல்லையில் சென்றபோது, எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார்.
    இதனால் நிலைதடுமாறிய அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. பேருந்துப் பயணிகளான புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (65), அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த அனிதா (38), காசியம்மாள் (42) உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
    இவர்கள் அனைவரும் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தானிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai