Enable Javscript for better performance
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
    பயிற்சி துணை ஆட்சியர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யு.ஜான் லூயிஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
    கூட்டத்தில், டிஜிட்டல் விநியோகஸ்தர்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆகியோரிடையே அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்கள் தொடர்பான நிறை, குறைகள், தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
    இதில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன பொது மேலாளர் ஆர்.ராஜகிருபாகரன், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் முரளி பார்த்தசாரதி மற்றும் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அரசு கேபிள் டிவி
    நிறுவன மாவட்ட துணை மேலாளர்கள், தனி வட்டாட்சியர்கள், மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வட்ட டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai