Enable Javscript for better performance
செய்யாறு ஒன்றியத்தில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு ஒன்றியத்தில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 22nd July 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் 4 கிராமங்களில் ரூ.87.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அரசுக் கட்டடங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
    செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த புளியரம்பாக்கம், வடுகப்பட்டு, பாராசூர், மேல்நாகரம்பேடு, முக்கூர் ஆகிய கிராமங்களில் ரூ.87.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அரசுக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மேல்நாகரம்பேடு கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், முக்கூர் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி சேவை மையக் கட்டடம், பாராசூரில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டடம், புளியரம்பாக்கம் ஊராட்சியில் (செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகம்) ரூ.30.30 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார சேவை மையக் கட்டம், வடுகப்பட்டு கிராமத்தில் ரூ.14.55 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி சேவை மையக் கட்டடம் மற்றும் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழல்கூடம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஹரிஹரன், உதவிச் செயற்பொறியாளர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.காந்திமதி, பாஸ்கரன், மு.பாஸ்கரன், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எம்.மகேந்திரன், டி.பி.துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai