Enable Javscript for better performance
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஆடிச் சுவாதி நால்வர் விழாக் குழு சார்பில், திருமுறை இன்னிசை விழா, திருமுழுக்காட்டு விழா, திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றன.
    இதையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற திருமுறை இன்னிசை விழாவுக்கு வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் க.காமாட்சி தலைமை வகித்தார். களம்பூர் சாமிநா
    த.கதிரேசன் மற்றும் அவரது குழுவினர் திருமுறை இன்னிசை வழங்கினார்.
    தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை அறுபத்து மூவர் உள்ளிட்ட நிலைத்திருமேனிகள் மற்றும் நால்வர் உற்சவ திருமேனிகளுக்கு திருமுழுக்காட்டு விழா நடைபெற்றது.
    இரவு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உற்சவ திருமேனிகளின் திருவீதி உலா நடைபெற்றன. கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட வீதிஉலா, காந்தி சாலை, அச்சரப்பாக்கம் சாலை, பாலு உடையார் தெரு, சன்னதி தெரு வழியாகச் சென்றது. விழாவில், திருவோத்தூர் திருமுறை வளர்ச்சிப் பணி மன்றத் தலைவர் வ.கண்ணப்பன், ஆடிச் சுவாதி நால்வர் விழாக்குழு நிறுவனர் அ.வே.முனுசாமி, செயலர் ஆ.மயில்வாகனன், செயற்குழு உறுப்பினர்கள் த.முருகவேல், சோ.கிருஷ்ணன், வா.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai