Enable Javscript for better performance
திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தார்.
    மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, அ.அருள்குமரன், சு.விஜி (எ) விஜயராஜ், த.செந்தில்குமார், எம்.ஆர்.கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார்.
    கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகும் வரை இளைஞரணியினர் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் பணியில் தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு 2-ஆவது இடம் கிடைக்கப் பாடுபட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் து.சக்கரவர்த்தி, அ.தண்டபாணி, ஒன்றியச் செயலர்கள் கோ.ரமேஷ், மு.பன்னீர்செல்வம், சி.மாரிமுத்து, மாவட்ட அமைப்பாளர் சேஷா.திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai