Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு பள்ளித் தாளாளர் டி.அரவிந்த்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் தர்மிசந்த் ஜெயின், செயலர் சுப்பராயன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் பரமன் பச்சைமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார்.
    தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் உரிய விளக்கம் அளித்தார். முகாமில், பள்ளி துணைத் தலைவர் ஆர்.கலாவதி, இணைச் செயலர் எஸ்.பிரபாகரன், பி.மழலைநாதன், பள்ளி நிர்வாக உறுப்பினர் செந்தில்நாதன், பள்ளி முதல்வர் கே.வி.ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai