Enable Javscript for better performance
பாஜக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, போளூர் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தொகுதி அமைப்பாளர் என்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
    மாநிலச் செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
    இதில், மாவட்ட துணைத் தலைவர் (பொதுப் பிரிவு) ஆர்.பிரதீஷ்குமார், நகர நிர்வாகிகள் ஆறுமுகம், பாலமுரளி, ஸ்ரீதர், கே.வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் கே.ராதாகிருஷ்ணன், ஆர்.சக்திவேல், ஒன்றிய பொதுச் செயலர்கள் சி.அருணாச்சலம், ஏழுமலை, மகாதேவன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    போளூர்: போளூர் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் போளூரில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், போளூர் சட்டப் பேரவை தொகுதிப் பொறுப்பாளருமான சாசாஎன்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான பி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் என்.ரமேஷ் வரவேற்றார். கலை, கலாசாரப் பிரிவு மாநிலச் செயலர் அழகன்தமிழ்மணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட வர்த்தக அணிச் செயலர் ஆர்.கோபிநாத், மாவட்ட விவசாய அணித் தலைவர் பழனி உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai