Enable Javscript for better performance
மாணவர்கள் நலனில் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர்களின் பங்கு முக்கியமானது'- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் நலனில் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர்களின் பங்கு முக்கியமானது'

    By DIN  |   Published on : 22nd July 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி வளர்ச்சி, மாணவ, மாணவிகளின் கல்வி நலனில் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறினார்.
    திருவண்ணாமலை, செங்கம், போளூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் அ.உஷாராணி தலைமை வகித்தார். போளூர் மாவட்டக் கல்வி அலுவலர் பி.ராஜேந்திரன், செங்கம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சி.கந்தசாமி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
    பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது. மாணவ, மாணவிகளின் உடை கட்டுப்பாடு, முடி வெட்டுதல் ஆகியவற்றைக் கண்காணித்தும், அவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் செயல்பட வேண்டும். இவற்றை மீறும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து வந்து மாணவர்களை ஒழுங்குப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தடையின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதுடன், அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்றிவிட்டால் தேர்ச்சி உறுதியாகிவிடும் என்றார்.
    கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெ.அன்பழகன், எம்.ரேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai