Enable Javscript for better performance
மாவட்டத்தில் 2-ஆவது நாளாக 1,000 லாரிகள் இயங்கவில்லை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சுமார் 1,000 லாரிகள் இயங்காததால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும்.
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1,000 லாரிகள் ஓடவில்லை: அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500 மண்பாடி லாரிகள் ஓடவில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஞானமூர்த்தி தெரிவித்தார்.
    மாவட்டம் முழுவதும் மற்ற சரக்கு லாரிகள் என மொத்தம் சுமார் ஆயிரம் லாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் ஓடவில்லை.
    இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai