Enable Javscript for better performance
ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

    By DIN  |   Published on : 22nd July 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே நியாயவிலைக் கடையில் முறையாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வந்தவாசியை அடுத்த தெள்ளூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக அந்தக் கிராம மக்கள் சனிக்கிழமை காலை சென்றனர்.
    அப்போது, கடைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பொருள்கள் வழங்கும் அளவுக்கு இருப்பு இல்லை என்று நியாயவிலைக் கடை விற்பனையாளர் தெரிவித்தாராம்.
    இதனால் கடை விற்பனையாளருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடை விற்பனையாளர், நியாயவிலைக் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.
    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தெள்ளூரில் உள்ள வந்தவாசி - ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, நியாயவிலைக் கடையில் பொருள்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்தும், கடையை பூட்டிவிட்டுச் சென்ற விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
    இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வடக்கு போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai