ஆத்துரை காளியம்மன் கோயிலில் ஜூலை 29-இல் தேர்த் திருவிழா
By DIN | Published on : 23rd July 2018 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் வரும் 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.
ஆத்துரை ஊராட்சியில் கிராம தேவதையான ஸ்ரீகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜை, கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல், சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வரும் 28-ஆம் தேதி 108 பால்குட ஊர்வலம், அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், வரும் 29-ஆம் தேதி தேரோட்டம், வாணவேடிக்கையும், வரும் 30-ஆம் தேதி இரவு தெய்வீக நாடகமும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை ஆத்துரை ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.