Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் பரிசு

    By DIN  |   Published on : 23rd July 2018 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 18ஆவது கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பெற்ற முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
    எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது வாரிசுகளின் மதிப்பெண் பட்டியல், தங்கள் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படை வீரர் 
    நல உதவி இயக்குநர் அலு வலகத்தை முன்னாள் படை வீரர்கள் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai