Enable Javscript for better performance
புகைப்பட கலைஞர்களுக்கு அடையாள அட்டை- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் ஒன்றிய புகைப்பட கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு புகைப்பட கலைஞர்கள் சங்க ஒன்றியத் தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். புகைப்பட கலைஞர்கள் ரத்தினம், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ராஜாராம் வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் ரேணுகா கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்களுக்கு அடையாள அட்டையை வழங்கிப் பேசினார். டிஎஸ்பி சுந்தரமூர்த்தி புகைப்பட கலைஞர்களை வாழ்த்திப் பேசினார்.
    தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பின்னர், சங்க செயல்பாடுகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் செங்கம் தாலுகா அனைத்து புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai