Enable Javscript for better performance
விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை

    By DIN  |   Published on : 23rd July 2018 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேட்டவலம் நகர தேமுதிக சார்பில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
    மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
    இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் உள்ள தூய நெஞ்ச தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.
    நகர துணைச் செயலர்கள் பலராமன், சிவக்குமார், வட்டச் செயலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய பங்குத்தந்தை எஸ்.கிளமெண்ட் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். இதில், ஒன்றியப் பிரதிநிதி ஏழுமலை, கேப்டன் மன்றச் செயலர் வெங்கடேசன், ராஜேஷ், சரவணன், ஆரோக்கியதாஸ், மணிகண்டன், சிலுவை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai