Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த பறையம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
    கல்வி வளர்ச்சி நாள் விழா, காமராஜர் பிறந்த நாள் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா, தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பாவலர் ப.குப்பனுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற சிறப்புத் தலைவர் சாம்பசிவம் தலைமை வகித்தார். தலைவர் பச்சையப்பன், தலைமை ஆசிரியர்கள் ராம், ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் சதீஷ்குமார் வரவேற்றார்.
    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார்.
    தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாள் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பாவலர் ப.குப்பனைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
    தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியர் பொன்னுரங்கன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai