Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவர் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த சு.காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் (62). இவர், ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் கிராமத்துக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தெள்ளாறு பகுதியில் சென்றபோது, வாசுதேவனின் வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
    இதனால் பலத்த காயமடைந்த வாசுதேவன், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மதுராந்தகத்தை அடுத்த கிளியா நகரைச் சேர்ந்த பசுபதி (20) ஆகியோர் தெள்ளாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு வாசுதேவன் உயிரிழந்தார்.
    பசுபதி தீவிரச் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதுகுறித்து தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai