Enable Javscript for better performance
சமூக நீதிக்கட்சி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக நீதிக்கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ந.பன்னீர்செல்வம், பொதுச் செயலர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, நிலம் இல்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தாட்கோ கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai