Enable Javscript for better performance
ஜூலை 26-இல் மாற்றுத் திறனாளிகுழந்தைகளுக்கான மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 26-இல் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 24th July 2018 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
    இதுகுறித்து செய்யாறு வட்டார வள மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில், 0 - 18 வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயனடையலாம். 
    இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனுடைய குழந்தைகளை பரிசோதித்து, அடையாள அட்டை வழங்கவும், தேவையான குழந்தைகளுக்கு காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி போன்ற உதவி உபகரணங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கவும் பரிந்துரைக்க உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai