Enable Javscript for better performance
தச்சூரில் ரூ.4 கோடியில் நிறுவப்பட்ட துணை மின் நிலையம் சோதனை ஓட்டம்: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தச்சூரில் ரூ.4 கோடியில் நிறுவப்பட்ட துணை மின் நிலையம் சோதனை ஓட்டம்: அமைச்சர் ஆய்வு

    By DIN  |   Published on : 24th July 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த தச்சூரில் ரூ.4 கோடியில் நிறுவப்பட்ட துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அண்மையில் ஆய்வு செய்தார்.
    தச்சூரில் தீனதயாள் உபாத்தியாயா கிராம யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியில் 3311 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் நிறுவப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
    அப்போது, ஒன்றியச் செயலர்கள் எம்.வேலு, பிஆர்ஜி.சேகர், மாவட்ட மின் மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன், ஆரணி செயற்பொறியாளர் சரஸ்வதி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    இந்த துணை மின் நிலையத்தின் மூலமாக தச்சூர், அரையாளம், நெசல், இராந்தம், மதுரைபெரும்பட்டூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் 11,567 குடும்பத்தினர் பயனடைவர்.
    ஏற்கனவே இங்கு 11033 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலைய பணிகள் முடிவடைந்த நிலையில், அந்த துணை மின் நிலையத்தை கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதியன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai