Enable Javscript for better performance
தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில், முப்பெரும் விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
    இதில், சங்கத்தின் 13-ஆம் ஆண்டு விழா, கடந்த அரசு பொதுத் தேர்வுகளில் தமிழ்  பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கலை விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
    விழாவுக்கு சங்கத் தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செந்தில்குமார், சங்கச் செயலர் சு.வெங்கடேசன், துணைத் தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயற்குழு உறுப்பினர் கு.இராமஜெயம் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கத் தலைவர் பொன்.ஜினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
    கடந்த அரசு பொதுத் தேர்வுகளில் தமிழ் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வங்காரம் ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளித் தாளாளர் பெ.சிவக்குமார் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். வந்தவாசி இராமலிங்கம் அண்ட் கோ உரிமையாளர் இரா.சிவக்குமரன் மாணவர்களை பாராட்டிப் பேசினார்.
    புதுவை வீணை.மணிமாறன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, பேராசிரியர் ச.கிருஷ்ணமூர்த்தியின் மாயாஜால நிகழ்ச்சி நடைபெற்றன. சங்கப் பொருளாளர் ஆ.மயில்வாகனன், சாமி.பிச்சாண்டி, ப.பன்னீர்செல்வம், மு.பிரபாகரன், வா.லோகநாதன், புலவர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai