Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் இன்றுகறவை மாடு வளர்ப்புப் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் இன்று கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 24th July 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 24, 26) கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இயங்குகிறது. இங்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவ்வப்போது பல்வேறு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
    அதன்படி, செவ்வாய்க்கிழமையும், வரும் வியாழக்கிழமையும் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
    எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04175 - 206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai