Enable Javscript for better performance
தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார்

    By DIN  |   Published on : 24th July 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியை எம்எல்ஏ தூசி கே.மோகன் திங்கள்கிழமை வழங்கினார்.
    செய்யாறு வட்டம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மனைவி உண்ணாமலை (67). இவர், குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். உண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் சமையல் செய்தபோது, தீப்பற்றியதில் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
    இதனையறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சொந்தப் பணத்திலிருந்து ரூ.5 ஆயிரமும், அரிசி, வேட்டி, சேலை மற்றும் அரசு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் செய்யாறு வட்டாட்சியர் எம்.மகேந்திரமணி, முன்னாள் எம்எல்ஏ குணசீலன், முன்னாள் உள்ளாட்சிப் பிரநிதிகள் எம்.மகேந்திரன், எஸ்.கிருஷ்ணன், சுகாதகர், ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai