Enable Javscript for better performance
தேசிய கோவா விளையாட்டு விழா:கல்லூரி மாணவர்கள் 9 பேர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய கோவா விளையாட்டு விழா: கல்லூரி மாணவர்கள் 9 பேர் தேர்வு

    By DIN  |   Published on : 24th July 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான சீனியர் கோவா விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை கோவாவில் தேசிய அளவிலான சீனியர் கோவா விளையாட்டு விழா நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு விளையாட திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எஸ்.நவீன்குமார், எஸ்.ஆர்.நிஷார் (3-ஆம் ஆண்டு வேதியியல்), எஸ்.இம்ரான், ஏ.வெங்கட் (3-ஆம் ஆண்டு பிசிஏ), எஸ்.தமிழ்பாரதி (3-ஆம் ஆண்டு பிபிஏ), வி.சரண், எஸ்.அஜீத், எஸ்.முகம்மது 
    (2-ஆம் ஆண்டு பிசிஏ), எஸ்.ஹேம்நாத் (2-ஆம் ஆண்டு பி.காம்) ஆகியோரை பாராட்டும் விழா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    விழாவில், கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், உடற்கல்வி இயக்குநர் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai