Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 650 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 650 மனுக்கள் பெறப்பட்டன.
    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 
    சு.சரவணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai