Enable Javscript for better performance
மாவட்ட மைய நூலகத்தில்வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஜூலை மாதத்துக்கான வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
    சிந்தனைச் சாரல் - 52 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வாசகர் வட்டத் தலைவரும், நூலக ஆர்வலருமான வாசுதேவன் தலைமை வகித்தார். 
    தேசிய நல்லாசிரியர் இரா.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாணவர்களும், நூலகமும் என்ற தலைப்பில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் சாமுவேல் பேசினார்.
    தொடர்ந்து, அப்துல் கலாம் பொன்மொழிகள் என்ற நூலை முதுநிலை தமிழ் ஆசிரியர் ச.பரணி ஆய்வு செய்தார். கவிச்சுடர் அஜ்மல் என்ற முத்தமிழன் மற்றும் தமிழ்ச்செம்மல் சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    கூட்டத்தில், வாசுதேவன் ரூ.10 ஆயிரம் அளித்து நூலகக் கொடையாளராகவும், சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் ரூ.5 ஆயிரம் அளித்து நூலக பெரும் புரவலராகவும் இணைந்தனர்.
    இதில், முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, நூலகர் ஹேமா, வி.ஜி.என் பள்ளி மாணவி இல.சஞ்சனா, நல் நூலகர் சாயிராம் மற்றும் மைய நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai