Enable Javscript for better performance
ரூ.10.20 கோடி மதிப்பிலான பொருள்கள் மோசடி:தொழிலதிபர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.10.20 கோடி மதிப்பிலான பொருள்கள் மோசடி: தொழிலதிபர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 24th July 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் போலி பத்திரங்கள் மூலம் ரூ.10.20 கோடி மதிப்பிலான பொருள்களை மோசடி செய்த தொழிலதிபர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர், திருவண்ணாமலை, தேரடி தெருவில் ஜவுளிக்கடை நடத்தினார். இந்த இடத்தின் உரிமையாளர் செந்தில்குமாருக்கு கடையின் முன்தொகையாக ரூ.40 லட்சத்தைத் தந்தாராம்.
    இதைப் பெற்றுக்கொண்ட செந்தில்குமார், வருமான வரி பிரச்னை வரும் என்று கூறி இதற்கான ரசீதை தர மறுத்து விட்டாராம். இதையடுத்து, கடையின் 3 மாடியை சுமார் ரூ. ஒரு கோடியே 80 லட்சம் செலவில் குளிர்சாதன வசதி, அலங்கார வேலைகளை சேகர் செய்தாராம்.
    வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில், இடத்தின் உரிமையாளர் செந்தில்குமார், கடை உரிமையாளர் சேகர் ஆகியோருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே, செந்தில்குமார் கடையை மூடி கதவை வெல்டிங் வைத்து அடைத்தாராம்.
    இந்த நிலையில், திருவண்ணாமலை நகர போலீஸில் சேகர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், துணிக் கடையில் எனக்குச் சொந்தமான துணிகள், ஜெனரேட்டர் என மொத்தம் ரூ.10 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் இருந்தன. இவற்றையெல்லாம் நான் பெற்றுக்கொண்டதாக போலி பத்திரம் தயாரித்து வைத்துள்ள செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், தொழிலதிபர் செந்தில்குமார் மீது மோசடி, திருட்டு உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai