Enable Javscript for better performance
வாக்குச்சாவடி  முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோமாசிபாடி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியச் செயலர் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். 
    ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இரா.ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணை கொறடாவும், கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே, வாக்குச்சாவடி முகவர்களுக்கள் திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியச் செயலர் எம்.ஆர்.அன்புமணி, ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.வி.கர்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயராஜ், வழக்குரைஞரணி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai