Enable Javscript for better performance
ஆரணி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க சிறப்பு நிதி வழங்க வேண்டும்: மக்களவையில் எம்.பி. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க சிறப்பு நிதி வழங்க வேண்டும்: மக்களவையில் எம்.பி. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி பட்டு, கைத்தறி ஆடைகளை தயாரிக்கும் நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என மக்களவையில் ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல்  வெ.ஏழுமலை வலியுறுத்தினார்.
    இதுகுறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை பேசியதாவது:
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, பட்டு ஜவுளிகளுக்கு பெயர் பெற்ற நகரமாகும். ஆரணி பட்டு, கைத்தறி ஆடைகள் பாரம்பரியமிக்கவை. 
    இந்திய அரசின் புவிசார் குறியீடுகளில் பதிவுபெற்ற தயாரிப்பாக ஆரணி பட்டு திகழ்கிறது. ஆரணியில் பாரம்பரியமாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் இந்தத் தொழில் திறமையை தங்கள் மூதாதையர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். அடுத்த தலைமுறை நெசவாளர்களுக்கு இந்த பட்டு உற்பத்தித் திறன்களை கொண்டு செல்லும் வகையில், ஆரணியில் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
    ஆனால், துரதிருஷ்டவசமாக இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலில் வருவாய் அதிகம் இல்லாத காரணத்தால், இந்தத் தொழிலில் ஈடுபாடு காட்ட மறுக்கின்றனர். எனவே, ஆரணி பகுதி நெசவாளர்கள் நெசவுத்தொழிலை தொடரும் வகையில், மத்திய அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். மேலும், ஆரணி பட்டு, கைத்தறி ஆடைகளை தயாரிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடவும், நலனைப் பாதுகாக்கவும் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai