Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சாம்பசிவம் தலைமை வகித்தார். மண்டலச் செயலர் எம்.மணி, மாவட்டப் பொருளாளர் சி.ராதாகிருஷண்ன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்டச் செயலர் என்.ராமலிங்கம் வரவேற்றார். சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பொன்.திருவேங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநில பிரசாரச் செயலர் கே.விஸ்வநாதன், மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் ஏ.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai