Enable Javscript for better performance
செங்கம் அரசுப் பள்ளியில் பாடம் நடத்தாத முதுநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அரசுப் பள்ளியில் பாடம் நடத்தாத முதுநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 25th July 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அரசுப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம், செய்முறை, ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தாத இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு ஈடுபட்டு வருகிறது.
    இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் இடைப்பருவத் தேர்வை ஆய்வு செய்தார். அப்போது, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு இயற்பியல் பாட ஆசிரியர் வகுப்புகளை முறையாக நடத்தவில்லை என்றும், நடத்தாத பாடத்தில் இருந்து தேர்வு எழுதுவது கடினமாக உள்ளது என்றும் புகார் கூறினராம். மேலும், இதுவரை செய்முறைத் தேர்வையும், தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் வகுப்பையும் இயற்பியல் பாட ஆசிரியர் நடத்தவில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது.
    இதுகுறித்து விசாரிக்குமாறு செங்கம் மாவட்டக் கல்வி அலுவலர் கந்தசாமிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.  இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் கந்தசாமி, செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காமத் ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, எழுத்துப் பூர்வமான புகார்களைப் பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.
    பணியிடை நீக்கம்: இதையடுத்து, மாணவர்களுக்கு பாடம், செய்முறை, ஸ்மார்ட் வகுப்புகளை நடத்தாத அந்தப் பள்ளியின் இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியர் முகமது மைனுதீனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டார்.
    பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முகமது மைனுதீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் 14 ஆசிரியர் சங்கங்களில் ஒரு சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai