Enable Javscript for better performance
சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை திருமுறைக் கழகம் சார்பில், சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு திருமுறைக் கழகத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் பரசுராமன், நல்லாசிரியர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மெய்ப்பொருள் நாயனார் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    இதில், மாவட்ட கவிஞர் பேரவை பொருளாளர் அம்பி, அருணகிரிநாதர் விழாக்குழு இணைச் செயலர் ராஜேந்திரபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai