Enable Javscript for better performance
ஜூலை 27-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8, 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 27-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8, 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்

    By DIN  |   Published on : 25th July 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8, 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் இசிஎன் ஹைடெக் அக்ரி என்ற தனியார் நிறுவனம் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான உதவியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
    இந்தப் பணிக்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்த 20 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும், இ.எஸ்.ஐ., போனஸ் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
    மொத்தம் 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பணியமர்த்தப்படுவர். 
    இந்தப் பணியில் சேர விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai